இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் அறிவித்த பொருளாதார தடைகளில் இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 19-வது பொருளாதார தடைகள் தொகுப்பை அறிவித்துள்ளது.
இதில் உலகளவில் 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த 3 நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
Aerotrust Aviation Private Limited, Ascend Aviation India Private Limited, மற்றும் Shree Enterprises ஆகிய இந்திய நிறுவனங்கள், ரஷ்ய இராணுவத்துக்கு தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

CNC மெஷின் கருவிகள், மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ், மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் போன்ற இரட்டை பயன்பாட்டு (dual-use) பொருட்கள் ரஷ்யாவின் பாதுகாப்பு துறைக்கு வழங்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் மீது கடும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ரஷ்யாவின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு பங்களிக்கும் எந்தவொரு பொருளும் இப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் போர் முயற்சிகளை பொருளாதார ரீதியில் பாதிக்க ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த 45 நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் ரஷ்யாவிற்கு வெளியே உள்ளன. இதில் 12 சீனாவிலும், 3 இந்தியாவிலும், 2 தாய்லாந்திலும் உள்ளன. இந்திய அரசாங்கம் இதற்கான பதிலை இன்னும் வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
EU sanctions Indian companies 2025, Russia India export ban, Aerotrust Aviation EU blacklist, Ascend Aviation Russia links, Shree Enterprises EU action, EU 19th sanctions package, Dual-use tech export restrictions, India Russia defence trade, European Union sanctions list, Ukraine war economic measures