யாருக்கெல்லாம் ஐரோப்பாவிற்குள் நுழைய அனுமதி! கசிந்த முக்கிய தகவல்
வெளிநாட்டு பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த மற்றும் பாதுகாப்பான நாடுகளிலிருந்து 2 டோஸ் தடுப்பூசி போட்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்த திட்டத்திற்கு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் ஒப்புதல் அளித்தல் அது நடைமுறைப்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்த முடிவை எதிர்வரும் நாட்களில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் தற்போது அவுஸ்திரேலியா, இஸ்ரேல், நியூசிலாந்து, ருவாண்டா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் சீனா உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பட்டியலில் பிரித்தானியா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.