எரிபொருளைப் பதுக்கவேண்டாம்... ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எச்சரிக்கை
ஈரான் போர் காரணமாக ஐரோப்பிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கான எண்ணெய் விநியோகம் தடைபடும் அபாயம் உள்ளதால், எண்ணெயை பதுக்கவேண்டாம் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.
எண்ணெயை பதுக்கவேண்டாம்...
ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உலக எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஹங்கேரி மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டது.
ஸ்லோவாகியா, வெளிநாட்டு லைசன்ஸ் பிளேட் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இந்த நாடுகளைத் தொடர்ந்து, மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் இதே நிலையை பின்பற்றக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தவேண்டாம் என்று கூறியுள்ள ஐரோப்பிய ஆணையம், அப்படிச் செய்வது ஒற்றைச் சந்தை முறையை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |