தலிபான்கள் வாக்குறுதிகளை மதிக்கத் தவறிவிட்டனர்! ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தில் பல்வேறு குழுக்களை உள்ளடக்கிய புதிய ஆட்சியாளர்கள் இடம்பெறுவார்கள் என்ற வாக்குறுதிகளை தலிபான்கள் மதிக்கத் தவறிவிட்டனர் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
தலிபான்கள் செவ்வாய்க்கிழமை புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தனர்.
ஐக்கிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் கீழ் அல்லது பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய புள்ளிகள் தலிபான் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் தலிபான் அல்லாதவர்கள் இடம்பெறவில்லை.
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட பெயர்களை பகுப்பாய்வு செய்ததில், நாங்கள் எதிர்பார்த்தது போல் ஆப்கானிஸ்தானின் இன மற்றும் மத வேறுபாட்டின் அடிப்படையில் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
List of Acting Ministers and Heads of Departments ( in English): pic.twitter.com/XozPDYjAF6
— Suhail Shaheen. محمد سهیل شاهین (@suhailshaheen1) September 8, 2021
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் தலிபானுடனான தங்கள் ஈடுபாட்டை அதிகரிக்க, பல்வேறு குழுக்களை உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது உட்பட ஐந்து நிபந்தனைகளை வகுத்துள்ளன.
பேச்சுவார்த்தைகளின் விளைவாக எதிர்கால இடைக்கால அரசாங்க அமைப்பில் பல்வேறு குழுக்களை உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஆட்சியாளர்கள் இடம்பெறுவார்கள் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.