ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூலை 4ம் திகதி வரை கெடு: டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
அமெரிக்கா மீதான வர்த்தக வரியை ஐரோப்பிய ஒன்றியம் குறைக்க வேண்டும் என்று டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக போர் புதிய கட்டத்தை நெருங்கியுள்ளது.
எதிர்வரும் ஜூலை 4ம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க பொருட்கள் மீதான வர்த்தக வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் இதனை குறிப்பிட்ட திகதிக்குள் செயல்படுத்தாவிட்டால் ஐரோப்பிய பொருட்களின் மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதிக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூட் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,ஸ்காட்லாந்தின் டர்ன்பெர்ரி நகரில் எட்டப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிகளை பூஜ்ஜியமாக குறைக்கும் வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படும் என்று காத்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சுதந்திர தினமான மே 4-ம் திகதிக்குள் இது நடைபெறாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |