ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல்
ட்ரோன்கள் தொடர்ந்து உங்கள் நாடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, மக்களை நிம்மதியாக உறங்க விடாது என ஐரோப்பாவின் தலைவர்களை ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான போரில்
ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவராக தற்போது பொறுப்பில் இருப்பவர் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான டிமிட்ரி மெத்வதேவ் என்பவரே.

ரஷ்யாவின் பொறுப்பற்ற நடத்தை குறித்து நேட்டோ குற்றம் சாட்டியதோடு, நேச நாடுகளின் பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பதாக உறுதியளித்த நிலையிலேயே மெட்வெடேவ் மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலின்போது ரஷ்ய ட்ரோன் ஒன்று ருமேனியாவின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக அந்த நாடு தெரிவித்துள்ளதை அடுத்தே, நேட்டோ பதிலளித்திருந்தது.
இந்த நிலையில், அந்த ட்ரோன் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருப்பதாக மெத்வதேவ் தெரிவித்தார்; இருப்பினும், ரஷ்யாவிற்கு எதிரான போரில் தாங்களே நேரடியாகப் பங்கேற்று வருவதால்,
ஐரோப்பாவின் இயலாமை மிக்க தலைவர்கள் இந்தச் சம்பவம் குறித்துக் கொந்தளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, அவர்கள் தயாராகட்டும்: இது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் என்றும் மெத்வெதேவ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது, போரிடும் நாடுகளின் மக்களைப் போலவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்களாலும் நிம்மதியாக உறங்க முடியாது என மெத்வெதேவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைனுக்காக ட்ரோன்கள் தயாரிக்கப்படும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இனித் தொடர வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் கொல்லப்படுகின்றனர்
எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பிய ட்ரோன்கள், அவற்றிற்கான உதிரி பாகங்கள் மற்றும் பிற ஆயுதங்கள், உளவுத் தகவல்களைக் குறிப்பிடத் தேவையில்லை, ஆகியவை ரஷ்யா மீதான தாக்குதல்களில் தினமும் பயன்படுத்தப்படுகின்றன.
அதன் விளைவாக, குடியிருப்புக் கட்டிடங்கள் சேதமடைந்து வருகின்றன; அவற்றில் ரஷ்ய மக்கள் கொல்லப்படுகின்றனர் எனவும் மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ருமேனியாவில் நிகழ்ந்த ட்ரோன் சம்பவம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாக, ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான 'டாஸ்' (TASS) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மேலும், கான்ஸ்டன்டாவில் உள்ள ரஷ்யத் தூதரகத்தை மூடுவதற்கான ருமேனியாவின் பதிலடி முடிவுக்கு புடின் நிர்வாகம் விரைவாகப் பதிலளிக்கும் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |