ஜேர்மனி முதல் ஸ்பெயின் வரை., 2026-ல் சர்வதேச மாணவர்கள் படிக்க சிறந்த 10 ஐரோப்பிய நாடுகள்
2026-ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு முக்கியமான கல்வி இலக்குகளாக மாறுகின்றன.
கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விசா தடைகள் அதிகரிக்க, ஐரோப்பாவில் கல்வி பெறும் மாணவர் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 சதவீதம் வளர்ச்சி காணும் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

StudiesIn என்ற பார்சிலோனாவைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், மாணவர்கள் தரமான கல்வி, குறைந்த செலவுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை முன்னிட்டு ஐரோப்பாவை தேர்வு செய்கிறார்கள்.
ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளும் அதிக முதலீடுகள் மூலம் சர்வதேச மாணவர்களை ஈர்க்கின்றன.
2026-ல் சர்வதேச மாணவர்கள் படிக்க சிறந்த 10 ஐரோப்பிய நாடுகள்
- ஜேர்மனி
- நெதர்லாந்து
- பிரான்ஸ்
- ஸ்பெயின்
- இத்தாலி
- அயர்லாந்து
- சுவீடன்
- பின்லாந்து
- டென்மார்க்
- ஆஸ்திரியா

ஜேர்மனியில் 2023 முதல் சர்வதேச மாணவர் சேர்க்கை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. இங்கு பல்கலைக்கழகக் கட்டணங்கள் இலவசம் மற்றும் வேலை வாய்ப்புகள் நம்பகமானவை.
நெதர்லாந்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கும் பாடநெறிகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன.
ஸ்பெயினில் மாதம் 900 யூரோ செலவில் வாழ முடியும், மேலும் 1,000க்கும் மேற்பட்ட ஆங்கில பாடநெறிகள் உள்ளன.
இத்தாலி, ஐர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், ஆஸ்திரியா போன்ற நாடுகளும் வேலை அனுமதி, கல்வி உதவித்தொகை, Erasmus+ வாயிலாக மாணவர்களுக்கு ஆதரவளிக்கின்றன.
மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு 12 முதல் 36 மாதங்கள் வரை வேலை தேட அனுமதி வழங்கப்படுவது முக்கிய ஈர்ப்பு அம்சமாக உள்ளது.
ஐரோப்பிய நாடுகள், குறைந்த கட்டணங்கள், வசதியான விசா விதிகள் மற்றும் பணியிட வாய்ப்புகள் மூலம் சர்வதேச கல்வி சந்தையில் முன்னிலை வகிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |