ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது! ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது
ரஷ்ய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
சனிக்கிழமை வர்ஜீனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசிய ஜனாதிபதி டிரம்ப், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ஐரோப்பா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது என்பது பண்ண கூடாது செயல் என்று குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் வாங்குவதை டிரம்ப் விமர்சிப்பது இது முதல்முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட, பிரித்தானிய சுற்றுப்பயணத்தின் இறுதியில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க தயாராக இருக்கிறோம், ஆனால் யாருக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ அவர்களே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் போது நாங்கள் ஏன் அதை செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |