ஐரோப்பிய நாடுகளின் கண் முன்னே... எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்த ரஷ்யா
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய எரிசக்தி மீது மேற்கத்திய நாடுகள் பல பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தும், எண்ணெய் ஏற்றுமதி கப்பல்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்தேக் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தடைகள் விதித்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் இரண்டின் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இதனால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் போயுள்ளது. மேற்கத்திய நாடுகளின் தடைகள் அமுலில் இருப்பதால் மட்டும், ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திக் கொள்ளவில்லை.
சட்டத்திற்கு உட்பட்டு, ரஷ்ய கொடி அல்லது, ரஷ்ய நிறுவனங்களால் பல்வேறு நாடுகளில் இருந்து செயல்படும் கப்பல்கள் மட்டும் தற்போது எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபடுத்தப்படவில்லை.
அதற்கு மாற்றாக உரிய ஆவணங்கள், செயல்படும் நாட்டின் கொடி உள்ளிட்ட எதுவும் இல்லாத கப்பல்களை ரஷ்யா களமிறக்கியது. தொடர்புடையக் கப்பல்களே ரஷ்யாவிற்கு எண்ணெய் வருவாயை ஈட்டித்தருகிறது.
இப்படியான சட்டத்திற்கு புறம்பான கப்பல்கள் கடலுக்கடியில் கேபிள்களை துண்டிக்கும் சதிவேலை, சட்டவிரோத ட்ரோன் ஏவுதல்கள் அல்லது அவர்களின் இருப்பிடத் தரவை வெளிப்படுத்தாமல் ஏமாற்றுதல் உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளால் கடும் நெருக்கடி இருந்தும், ரஷ்யா இப்படியான கப்பல்களை அதிக எண்ணிக்கையில் களமிறக்கியுள்ளதாகவே புதிய தரவுகள் உறுதி செய்கின்றன. இந்த ஆண்டு மட்டும், இதுவரை இப்படியான கப்பல்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து, தற்போது 450க்கும் அதிகமாக இயங்கி வருவதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் சீனா
எஸ்டோனிய கடற்படைத் தலைவர் தெரிவிக்கையில், வழக்கமாக கொடி அடையாளம் இல்லாத ஒன்று அல்லது இரண்டு கப்பல்கள் கடந்து செல்லும் நிலையில், இந்த ஆண்டு அவ்வாறான டசின் கணக்கான கப்பல்களை காண நேர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிற்காக சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் இந்த கப்பல்களின் 60 சதவீத உரிமையாளர்கள் யார் என்பது மர்மமாகவே உள்ளது என ஆய்வுகள் முன்னெடுக்கும் ஒரு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல தடைகள் விதித்திருந்தும், அக்டோபர் மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய்ப் பொருட்கள் விற்பனையால் ரஷ்ய அரசாங்கம் 13.1 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்புடுகையில் 2.3 பில்லியன் டொலர் வருவாய் சரிவடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் இந்த கப்பல்களில் 62 சதவீதம் இந்தியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இப்படியான கப்பல்கள் சிலவற்றை பிரான்ஸ், பின்லாந்து மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகள் கைப்பற்றி நடவடிக்கையும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |