ஐரோப்பாவில் சுற்றுலா சரிவு - சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகள் பாதிப்பு
2025-ஆம் ஆண்டில், ஐரோப்பாவின் பல நாடுகள் சுற்றுலா துறையில் குறைவான வருகை மற்றும் செலவினம் காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
இதில் சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஜேர்மனி, பெல்ஜியம், அர்மேனியா, அசர்பைஜான் ஆகியவை அடங்குகின்றன.
சுவிட்சர்லாந்தின் நிலை
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா வருகையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனால், சுற்றுலா வருவாய் 1.1 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
பயணிகள் வந்தாலும், அவர்கள் குறைந்த நாட்கள் தங்குதல் மற்றும் செலவினத்தை குறைத்தல் காரணமாக வருவாய் குறைந்துள்ளது.
பலவீனமான நாணய மதிப்பு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற நாடுகள்
ஜேர்மனி: சுற்றுலா வருகை 1.9 சதவீதம் குறைந்துள்ளது. வருவாய் 0.1 சதவீதம் குறைந்துள்ளது.
பெல்ஜியம்: வருகை 4.8 சதவீதம் அதிகரித்தாலும், வருவாய் 3.1 சதவீதம் குறைந்துள்ளது.
அயர்லாந்து: மிகப்பெரிய சரிவாக சுற்றுலா வருகை 9.0 சதவீதம் குறைந்துள்ளது, வருவாய் 13.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அசர்பைஜான்: சுற்றுலா வருகை 1.6 சதவீதம் குறைந்துள்ளது, வருவாய் நிலையாக உள்ளது.
அர்மேனியா: வருகை மாற்றமின்றி இருந்தாலும், வருவாய் 3.0 சதவீதம் குறைந்துள்ளது.
காரணங்கள்
பொருளாதார அழுத்தம், பயணச் செலவுகள் அதிகரித்தல், மற்றும் பட்ஜெட் உணர்வுள்ள பயணிகள் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
குறுகிய கால தங்குதலும், குறைந்த செலவினமும் சுற்றுலா துறையை பாதித்துள்ளது.
ஐரோப்பாவின் பல நாடுகள், சுற்றுலா வருவாய் குறைவால் பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றன. இதனை சமாளிக்க, உயர்தர அனுபவங்கள், அதிக செலவு செய்யும் பயணிகளை ஈர்த்தல், மற்றும் நீண்டகால தங்குதலை ஊக்குவித்தல் அவசியமாகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Switzerland tourism decline 2025 arrivals receipts drop, Ireland tourism crisis 9 percent arrivals 13 percent revenue fall, Germany tourism squeeze global travel budgets 2025, Belgium tourism arrivals rise spending falls 3.1 percent, Armenia tourism receipts decline despite stable arrivals, Azerbaijan tourism stagnation arrivals down spending flat, Europe tourism downturn economic pressures rising costs, Budget-conscious travelers shorter stays reduced spending Europe, High-value experiences strategy to revive tourism Europe, European tourism recovery plans affluent travelers longer stays