சீன தடுப்பூசிகள் பக்கம் கவனத்தை திருப்பும் ஐரோப்பிய நாடுகள்!
கொரோனா தடுப்பூசிகளின் விநியோக நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகள் சீன நிறுவன தடுப்பூசிகள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன.
பல ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி விநியோக நெருக்கடிக்கு எதிராக போராடி வருகின்றன, மேலும் ஊரடங்கு மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஒரு வழியை ஆராய்ந்துவருகின்றன.
ஐரோப்பா பெரும்பாலும் பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனேகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகளை எதிர்பார்த்து ஒப்பந்தம் செய்து வருகினற்ன. ஆனால் அவற்றின் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சில ஐரோப்பிய நாடுகள் எளிதில் கிடைக்கக்கூடிய வேறு சில தடுப்பூசிகளை வாங்க தொடங்கியுள்ளன.
கடந்த மாதத்தில், செர்பியா அதன் 6.5 மில்லியன் மக்கள்தொகையில் 14 சதவிகிதத்தினருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியை செலுத்தியது.
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 31 அன்று ஹங்கேரி அரசும் 2.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவியான தடுப்பூசிகளை பெற சீனாவின் சினோபார்ம் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், சீன தடுப்பூசிகளைப் பெறும் முதல் ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பினராக ஹங்கேரி திகழ்கிறது.
ஜேர்மனியும் கடந்த மாதம் ரஷ்யா அல்லது சீனாவின் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு விரைவில் சோதனை தொடங்கப்படும் என அறிவித்திருந்தது.
இதற்கிடையில் சைபீரியா மற்றும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிலும் சினோஃபார்ம் தடுப்பூசிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.