அந்த நாட்டின் மீது எங்கள் விமானங்கள் பறக்காது: ஐரோப்பிய நாடுகள் காட்டம்
பெலாரஸ் தலைநகருக்கு பயணிகள் விமானத்தை மிரட்டி திருப்பிவிட்டு, இளம் பத்திரிகையாளரை கைது செய்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள் அதிரடி முடிவை அறிவித்துள்ளன.
பத்திரிகையாளரும் பெலாரஸ் அரசாங்கத்தின் கடும் விமர்சகருமான Roman Protasevich கைதுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மட்டுமின்றி, பெலாரஸ் மீது பொருளாதார தடைகளும் விதித்துள்ளன. இந்த நிலையில் ஐரோப்பாவின் முக்கிய விமான சேவை நிறுவனங்கள் இனி மேல் பெலாரஸ் மீது தங்கள் விமானங்கள் பறக்காது என அறிவித்துள்ளன.
பிரான்ஸ் நாட்டின் முதன்மை விமான சேவை நிறுவனமாக ஏர் பிரான்ஸ், இனி மேல் பெலாரஸ் மீது தங்கள் விமானங்கள் பறக்காது என அறிவித்துள்ளன.
உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளும் பெலாரஸ் நாட்டுக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளன.
வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தி கிரேக்கத்தில் இருந்து லிதுவேனியா செல்லும் விமானத்தை பெலாரஸ் தலைநகருக்கு திருப்பி விட்டு, அந்த விமானத்தில் பயணம் செய்த பத்திரிகையாளர் Roman Protasevich வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்டு மாதம் தேர்தலின் போது நடந்த முறைகேடுகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்த Roman Protasevich, இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பெரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்க காரணமானார்.
இந்த நிலையில், பத்திரிகையாளர் Roman Protasevich மீது பெலாரஸ் அரசாங்கம் தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி வழக்குப் பதிந்தது.
இதனால் Roman Protasevich தற்போது மரணத் தண்டனையை எதிர்கொள்கிறார். ஞாயிறன்று நடந்த இந்த விவகாரம் தொடர்பில் 27 ஐரோப்பிய நாடுகள் ஒருமனதாக, இனி பெலாரஸ் மீது தங்கள் நாட்டு விமானங்கள் பறப்பதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளன.