'ரஷ்யாவின் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாது' பழிக்குப் பழி வாங்கிய ஐரோப்பிய நாடுகள்!
ரஷ்யாவின் நியாயமற்ற செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜேர்மனி, போலந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இணைந்து அதிரடியான முடிவை எடுத்துள்ளனர்.
ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி சிறையில் அடைக்கப்படத்தை தொடர்ந்து நடந்த ஆர்பாட்டங்களைக் கண்காணித்ததற்காக ஜேர்மனி, போலந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக கடந்த வாரம் ரஷ்யா அரசாங்கம் முடிவெடுத்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களும் மறுத்த சட்டவிரோத போராட்டங்களில் இந்த மூன்று நாடுகளின் தூதர்கள் பங்கேற்றதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.
இந்நிலையில், தங்கள் தூதர்கள் அவர்களது கடமையை தான் செய்துள்ளனர் என்றும் அவர்கள் வெளியேற்றப்படுவதற்கான காரணம் நியாயமானதாக இல்லை என்றும் ஜேர்மனி, போலந்து மற்றும் சுவீடன் அரசுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில், ரஸ்சியாவின் ஏற்றுக்கொள்ளமுடியாத செயலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதாக மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதிரடியாக அறிவித்துள்ளது.
சமீபத்திய வாரங்களில் நாவல்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பாக ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன, அவை நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டின.