2025யில் ஐரோப்பாவின் நம்பர் 1 பணக்காரர் இவர்தான்! 75 வயதில் கோடிகளில் வருமானம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட், 2025ஆம் ஆண்டின் நம்பர் 1 ஐரோப்பிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பெர்னார்ட் அர்னால்ட்
இந்த ஆண்டில் அதிக வருமானம் ஈட்டும் ஐரோப்பிய பணக்காரர்கள் பட்டியலில், LVMH நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) முதல் இடம் வகிக்கிறார்.
பிரான்ஸைச் சேர்ந்த 75 வயதான இவரின் நிகர மதிப்பு 189.6 பில்லியன் டொலர்கள் ஆகும். இதன்மூலம் உலகளவில் பணக்காரர்கள் பட்டியிலில் 5வது இடத்தையும் இவர் பிடித்துள்ளார்.
ஆண்டுக்கு இவர் 10 மில்லியன் டொலர்கள் வரை வருமானம் ஈட்டுவதாக மதிப்பிடப்படுகிறது.
அமன்சியோ ஓர்டெகா
ஸ்பெயினைச் சேர்ந்த அமன்சியோ ஓர்டெகா (Amancio Ortega) இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். Zara உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான இவரின் நிகர மதிப்பு 121 பில்லியன் டொலர்கள் என போர்ப்ஸ் கூறுகிறது.
இத்தாலி தொழிலதிபர்
அடுத்த இடத்தில் உள்ளவர் இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜியோவன்னி ஃபெர்ரெரோ (Giovanni Ferrero) ஆவார். எழுத்தாளருமான இவர் 4,180 கோடி டொலர்கள் நிகர மதிப்பு கொண்டுள்ளார்.
ஜேர்மனிய தொழிலதிபர் க்ளாஸ் மைக்கேல் குஹ்னே 3,690 கோடி நிகர மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளார்.
ஐந்தாவது இடத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் அலைன் வெர்தெய்மெர் உள்ளார். இவரின் நிகர மதிப்பு 3,530 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |