இரண்டு கைகளிலும் கத்தியுடன்... பாரிஸ் நகரை நடுங்கவைத்த சம்பவம்
பாரிஸ் நகரில் இரு கைகளிலும் கத்தியுடன் பொலிசார் மீது பாந்த நபரை சம்பவயிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியுடன்
பாரிஸ் நகரின் Dugny பகுதியிலேயே குறித்த நடுங்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் தம்மை தாக்க வேண்டும் என்ற நிலையிலேயே அவர் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து நிறுத்தம் ஒன்றில் அந்த நபர் இரு கைகளிலும் கத்தியுடன் அமைதியாக காத்திருந்ததாக தெரிய வந்துள்ளது. பொலிசார் அப்பகுதிக்கு வந்ததும், அந்த நபர் அவர்கள் மீது பாய்ந்துள்ளார்.
மட்டுமின்றி அந்த நபர் எந்த சத்தமும் எழுப்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே சுதாரித்துக் கொண்ட்ட பொலிசாரில் ஒருவர் சட்டென்று மின்சார ஸ்டன் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.
சம்பவயிடத்திலேயே
இன்னொரு அதிகாரி, தமது துப்பாக்கியால் அந்த நபர் மீது சுடவும், குண்டு அந்த நபரின் மார்பில் பாய்ந்துள்ளது. உடனடியாக அந்த நபரை காப்பாற்றும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், காயம் காரணமாக அந்த நபர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |