ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம்: வேஷம் போடும் நாடுகள்
ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் அதன் மீது கூடுதலாக வரிகள் விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
ஆனால், இந்தியா மட்டும்தான் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறதா? பின்லாந்து நாட்டின் ஆய்வமைப்பொன்று மேற்கொண்ட ஆய்வுகள் மேற்கத்திய நாடுகளின் முகத்திரையை கிழித்து உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளன.
வேஷம் போடும் நாடுகள்
பின்லாந்தை மையமாகக் கொண்ட Centre for Research on Energy and Clean Air (CREA) என்னும் ஆய்வமைப்பு, இந்தியாவை விட ஐரோப்பிய ஒன்றியம் அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயில் 13 சதவிகிதம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் கிடைக்கிறது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியமோ ரஷ்ய எண்ணெய் வருவாயில் 23 சதவிகித வருவாய்க்கு காரணமாக அமைந்துள்ளது என்கிறது CREA அமைப்பின் ஆய்வு முடிவுகள்.
அதாவது, ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எண்ணெயின் அளவைவிட, ஐரோப்பிய ஒன்றியம் வாங்கும் எண்ணெயின் அளவு மிக அதிகம்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மட்டும் வாங்கவில்லை, உரங்கள், ரசாயனங்கள், இரும்பு, எஃகு மற்றும் போக்குவரத்து சாதனங்களையும் வாங்குகிறது.
உக்ரைன் போர் துவங்கியபின், ஏற்றுமதி மூலம் ரஷ்யாவுக்கு கிடைத்த வருவாய் 923 பில்லியன் யூரோக்கள். அதில் இந்தியாவிடமிருந்து கிடைத்தது 121 பில்லியன் யூரோக்கள்.
அதே நேரத்தில், எண்ணெய், நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள், இயற்கை எரிவாயு முதலான விடயங்களை ரஷ்யாவிடம் வாங்கிய வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் ரஷ்யாவுக்குக் கிடைத்த வருவாய் 212 பில்லியன் யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |