கருணை கொலை செய்ய அனுமதி! சட்டம் கொண்டு வரும் பிரபல ஐரோப்பிய நாடு: வரும் ஜுன் முதல் அமுல்?
ஸ்பெயினில் வரும் ஜுன் மாதம் முதல் கருணை கொலை சட்டம் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது பெரும் போராட்டமாகவே இருக்கிறது. இதனால் இது போன்ற நிலையில் இருப்பவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் சட்டம், ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 202 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
எதிராக 140 வாக்குகள் பதிவாகின. ஆதரவாக சுமார் 60-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகமாக கிடைத்ததால், இந்த கருணைகொலை செய்யும் திட்டம், வரும் ஜுன் மாதம் முதல் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தை அந்நாட்டில் இருக்கும் இடது சாரி கூட்டணி அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு தீவிர வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாங்கள் ஆட்சி அமைக்கும் போது இந்த கருணைக்கொலை சட்டத்தை நீக்குவோம் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.