மொத்தம் 260 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர்... உலகின் இரக்கமற்றவர் என நீதிமன்றம்
தென்னாப்பிரிக்காவில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கி, பாலியல் துன்புறுத்தலுக்கும் இரையாக்கி, பின்னர் கொலை செய்த வழக்கில், 57 வயது நபருக்கு மிக அதிக ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொத்தம் 260 ஆண்டுகள்
கடந்த 2020 பிப்ரவரி மாதம் துவக்கத்தில் நடந்த இச்சம்பவத்தில் 57 வயதான Moehydien Pangaker என்பவருக்கு மொத்தம் 260 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
@newsflash
வெறு 8 வயதேயான Tazne van Wyk என்ற சிறுமி இனிப்பு வாங்க கடைக்கு சென்ற நிலையில், இவர் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளார். இவரது நடத்தை கொடூரத்தின் உச்சம் எனவும், துஸ்பிரயோகம் மட்டுமே இவரது நோக்கமாக இருந்து எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சிறுமி மாயமான 12 நாட்களுக்கு பின்னர் Worcester நகரின் பிரதான சாலை ஒன்றின் அருகாமையில், வெட்டி துண்டாக்கப்பட்ட அவரது உடல் மீட்கப்பட்டது. உள்ளூர் மக்களே உடலை கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
@newsflash
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 14ம் திகதி Pangaker-க்கு 9 ஆயுள் தண்டனை உட்பட மொத்தம் 260 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மகனை கொலை செய்த வழக்கு
இந்த கொடூர நபர், தமது சொந்த மகனை கொலை செய்த வழக்கில் சிறை சென்று, 5 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையாகியிருந்தார். சிறுமி Tazne van Wyk தொடர்பிலான உடற்கூராய்வில், தலை, மார்பு கழுத்து, இடுப்பு ஆகிய பகுதிகளில் பலமாக தாக்கியதாலையே மரணம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.
@newsflash
மட்டுமின்றி சிறுமியின் கை ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.
தமது குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதுடன், அவர் அதற்காக வருந்தவும் இல்லை என கூறப்படுகிறது.