Voting Machine -ல் இருப்பது எங்களோட மைக் சின்னமே இல்லை.. நாம் தமிழர் சீமானுக்கு தொடரும் பிரச்சனை
வாக்கு இயந்திரத்தில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை ஓட்டுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
சின்னம் பிரச்சனை
சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
பின்னர், படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்து மைக் சின்னத்தை உறுதி செய்தது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் மைக் சின்னத்தை வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த நெருக்கடி
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன.
இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்தது ஆன் - ஆஃப் ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம் ஆகும். ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னம் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |