ஒருநாளுக்கு ரூ.70 லட்சம் சம்பளம்: அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க தயங்கும் கால கட்டத்தில் அடோப் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புக்கு வந்தவர் இந்திய அமெரிக்கரான சாந்தனு நாராயண்.
அடோப் நிறுவனத்தின் தலைவர்
அமெரிக்க நிறுவனம் ஒன்றை கையாளும் போது பல விதமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து சாந்தனு நாராயண் டிசம்பர் 2007 முதல் அடோப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
2005ல், அடோப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் COO ஆக பணியமர்த்தப்பட்டார். இந்தியாவின் ஹைதராபாத் நகரில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தவர் சாந்தனு நாராயண்.
இவரது தந்தை பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றை நடத்தி வர, தாயார் பள்ளி ஆசிரியராக இருந்தார். கலிபோர்னியாவின் Palo Alto பகுதியில் தற்போது குடியிருந்து வரும் சாந்தனு நாராயண், 1980களில் Bowling Green மாகாண பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தற்போதைய தமது மனைவி ரெனியை சந்தித்துள்ளார்.
ஹைதராபாத் அரசு பள்ளியில் கல்வியை தொடங்கிய சாந்தனு நாராயண், பின்னர் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து, அத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இதையடுத்து அமெரிக்காவில் படிப்பை முடிக்க முடிவு செய்தார். நாராயண் 1986ல் ஓஹியோவின் பவுலிங் கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
உலகிலேயே அதிக சம்பளம்
1986ல், சாந்தனு நாராயண் சிலிக்கான் வேலி நிறுவனமான Measurex Automation Systems-ல் பணியாற்றத் தொடங்கினார். 1989 முதல் 1995 வரை, அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
பின்னர் அவர் சிலிக்கான் கிராபிக்ஸ் உடன் பணிபுரிய தொடங்கினார். 1998ல், சாந்தனு நாராயண் அடோப் நிறுவனத்தில் உலகளாவிய தயாரிப்பு மேம்பாட்டின் மூத்த துணைத் தலைவராக சேரும் வாய்ப்பைப் பெற்றார்.
2005ல் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் உயர் நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக சாந்தனு நாராயண் அறியப்படுகிறார்.
2022ல் 31 மில்லியன் டொலருக்கும் அதிகமாக, அதாவது 256 கோடி சம்பளமாக பெற்றார். தோராயமாக நாள் ஒன்றிற்கு 70 லட்சம் சம்பளம் என்றே கருதப்படுகிறது.
2021ல் 36.12 மில்லியன் டொலர் சம்பளமாக பெற்றுள்ளார். 2020ல் 45.8 மில்லியன் டொலர் சம்பளமாக பெற்றுள்ளார். ஹுருன் பட்டியலின்படி, சாந்தனு நாராயணின் சொத்து மதிப்பு 2022ல் 3,800 கோடி என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |