அணுஆயுத கட்டுப்பாட்டை அமெரிக்காவிற்கு வழங்கிய பாகிஸ்தான் - பரபரப்பு தகவல்
உலகில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் சில நாடுகளில், பாகிஸ்தானும் ஒன்று. சமீபத்திய இந்தியா உடனான மோதலில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அணு ஆயுத எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது பாகிஸ்தான் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டுப்பாடு அமெரிக்காவிடம்
இந்நிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இருந்தது என முன்னாள் CIA அதிகாரி பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஜான் கிரியாகோ(John Kiriakou) 15 ஆண்டுகள் CIA அமைப்பில் பணியாற்றியவர். மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு தலைவராக செயல்பட்டார்.
இது குறித்து பேசிய அவர், "நான் 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்த போது, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரப்(Pervez Musharraf) பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் வழங்கி இருந்தார்.

அணு ஆயுதங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றக்கூடும் என பரவிய தகவலை நம்பி அவர் இந்த முடிவை எடுத்தார்.
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கை
மேலும், முஷரப்பிற்கு அமெரிக்கா பல மில்லியன் டொலர்களை வழங்கி அவரின் ஒத்துழைப்பை பெற்றது. அமெரிக்கா செய்ய விரும்பியதை செய்ய அவர் அனுமதித்தார்.
சவுதி அரேபியா அவரை விட்டுவிடுங்கள் என கேட்டுக்கொண்டதன் பேரில், பாகிஸ்தானின் அணு ஆய்த வடிவமைப்பாளரான அப்துல் காதிர் கானை குறிவைப்பதில் இருந்து அமெரிக்கா விலகியது.

நாங்கள் இஸ்ரேலிய அணுகுமுறையை எடுத்திருந்தால்,அவரைக் கொன்றிருப்போம். அவரைக் கண்டுபிடிப்பது மிக எளிதாக இருந்தது. ஆனால் அது அமெரிக்காவின் தவறு.
முஷரப் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக அமெரிக்காவுடன் நடித்துக்கொண்டே, இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அவர் ஆதரவளித்தார். அவர் அல்கொய்தா பற்றி கவலைப்படவில்லை. இந்தியாவை பற்றியே கவலைப்பட்டார்.

2001 நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் அது நடவடிக்கவில்லை." என கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |