ஃப்ளைதுபாய் சம்பவம்; கிரிக்கெட் வீரரின் மகனான விமானியை கௌரவித்த UAE அரசு
ex cricketer son pilot in flydubai honoured by uae: ஃப்ளைதுபாய் விமான சம்பவத்தில் பயணிகளின் உயிரை காப்பாற்றிய கூடுதல் பணியாளராக இருந்த விமானி ரோவன் டூத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உயரிய விருது வழங்கி கௌரவித்தது.
இவர், முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பேரி டூத்தின் மகன் ஆவார்.
கிரிக்கெட் வீரரின் மகனான விமானிக்கு கௌரவம்
கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தை, ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி விமானத்தை தரையில் மோதி விபத்தை ஏற்படுத்த முயற்சித்தார்.

விமானியான இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சார் (Captain Smit Machchhar) அதை தடுக்க முயற்சித்த போது அவரை கோடரியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் சக விமானி.
படுகாயமடைந்த நிலையிலும், அந்த சதித்திட்டதை முறியடித்து 174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிய தொடங்கியது.

ஐக்கிய அரபு அமீரக அரசு, இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு First Class Order of Zayed II என்ற உயரிய விருதை வழங்கி கௌரவித்தது.
மேலும், கூடுதல் பணியாளராக ஓய்வில் இருந்த 2 துணை விமானிகளும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவரான ரோவன் டூத், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னதாக தென்னாப்பிரிக்க விமான நிறுவனமான ஏர்லிங்கில் பணிபுரிந்த அவர், 2023 ஆம் ஆண்டில் ஃப்ளைதுபாயில் சேர்ந்தார்.

இவர் கடந்த ஆண்டு காலமான முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பேரி டூத்தின் மகன் ஆவார்.