சிங்கப்பூர் ஜனாதிபதியாக இலங்கை தமிழர் வெற்றி
சிங்கப்பூர் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம்
சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் நாட்டின் சம்பிரதாயமான ஜனாதிபதி பதவிக்கு போட்டியின் மூலம் தெரிவாகியுள்ளார். பொருளாதார சவால்களுக்கு மத்தியில் ஆளும் கட்சி மீதான பொதுமக்கள் உணர்வினை இந்த தேர்தல் பிரதிபலிக்கும் என கூறப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளது.
@afp
எதிர்த்து போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களை விட 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று 66 வயதான பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றதாக தேர்தல்கள் திணைக்களம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஆட்சியில் இருக்கும் PAP கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சண்முகரத்தினம், கடந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அரசாங்கம் மற்றும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பேசிய சண்முகரத்தினம், இது சிங்கப்பூரின் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று நான் நம்புகிறேன். இது நாம் ஒன்றாக முன்னேறக்கூடிய எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் வாக்கு என தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாண தமிழர்
சிங்கப்பூரை பொறுத்தமட்டில் ஜனாதிபதி பதவி என்பது பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம், அரசியலமைப்பின் கீழ் கட்சி சார்பற்ற பதவி என்றே கருதப்படுகிறது. தற்போது சண்முகரத்தினம் தெரிவானதை அடுத்து 2017ல் இருந்து ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும் Halimah Yacob பதவி விலக இருக்கிறார்.
@afp
1959ல் இருந்து தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கும் PAP கட்சியின் Lee Hsien Loong என்பவரே பிரதமராக இருக்கிறார். தற்போது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாண தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |