கொரோனாவை வைத்து பல மில்லியன் ஊழல்.. சிக்கிய அமைச்சருக்கு நேர்ந்த கதி! நீதிமன்றம் விதித்த தண்டனை
இந்தோனேசியாவில் கொரோனாவிடமிருந்து மக்களை பாதுகாக்க தேவையான உதவி பொருட்களை வாங்குவதில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.
இந்தோனேசியாவில் கொரோனா பாதுகாப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான விசாரணையில் அப்போதைய சமூக விவகார அமைச்சர் Juliari Batubara சிக்கனார்.
இதனையடுத்து, Juliari Batubar தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கொரோனா ஊழல் தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடங்கியது.
வழக்கை விசாரித்து வந்த இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஊழல் நீதிமன்றம், கொரோனா ஊழல் வழக்கில் முன்னாள் சமூக விவகார அமைச்சர் Juliari Batubar-க்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தது.
கொரோனா சமூக உதவித் தொகுப்புகளுக்கான பொருட்களை வாங்குவது தொடர்பாக Juliari Batubar லஞ்சம் பெற்றதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
Juliari Batubar-க்கு 500 மில்லியன் இந்தோனேசியா ரூபியா அபராதமும், மோசடி செய்யப்பட்ட நிதியை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சிறைவாசம் முடிந்த பிறகு நான்கு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவது உட்பட பொதுமக்கள் சேவை தொடர்புடைய அரசாங்க பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.