Microsoft தொழில்நுட்ப வல்லுநராக இருந்த இந்தியர் - இப்போது ரஷ்யாவில் சாலை துப்புரவுப் பணியில்
ஒருகாலத்தில் Microsoft நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர், தற்போது ரஷ்யாவில் சாலை துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆச்சரியத்திற்குறிய வகையில், அவர் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் மண்டல் (Mukesh Mandal) எனும் இந்த நபர், Microsoft-இல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தற்போது ரஷ்யாவில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தெருக்களை சுத்தம் செய்வது போன்ற எளிய வேலை செய்து வருகிறார்.
இவரது சம்பளம் மாதம் 1 லட்சம் ரூபிள் (சுமார் ரூ .1.14 லட்சம்) என குறிப்பிடப்பட்டுள்ளது.

"நான் இந்தியன். எங்களைப் பொறுத்தவரை எந்த வேலையும் சிறியதல்ல. வேலை என்பது கடவுளை வழிபடுவது போன்றது," என்று அவர் கூறியுள்ளார்.
என்ன வேலை என்பதை விட உழைப்பின் கண்ணியம் தனக்கு முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், இந்த வேலை தற்காலிகமானது என்று மண்டல் கூறியுள்ளார். அவர் ஒரு வருடம் ரஷ்யாவில் வேலை செய்ய திட்டமிட்டுள்ளார், பணத்தை மிச்சப்படுத்தி, தனது நீண்டகால இலக்குகளை தொடர இந்தியா திரும்புகிறார்.
உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றியவர், இப்போது சாதாரண வேலை செய்து வருவது வாழ்க்கை சூழ்நிலைகளின் மாற்றத்தை காட்டுகிறது.
ரஷ்யாவில், வெளிநாட்டவர்களுக்கு சாதாரண வேலைகளிலும் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.
சமூக ஊடகங்களில், இந்த செய்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலர், “வேலை எதுவாக இருந்தாலும், உழைப்பின் மதிப்பு குறையாது” என பாராட்டுகின்றனர்.
சிலர், “உயர் கல்வி, தொழில்நுட்ப அனுபவம் இருந்தும், இவ்வாறு வேலை செய்வது வாழ்க்கையின் சவால்களை காட்டுகிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகள் குறித்து புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ex Microsoft Indian techie Russia job, Indian techie sweeping streets Russia, Russia street cleaning salary Rs 1 lakh, Indian engineer unusual career abroad, Microsoft ex employee Russia work news, Indian migrant workers Russia stories, Russia jobs for foreigners high pay, Indian tech professional Russia lifestyle, Ex Microsoft employee Russia monthly pay, Indian abroad career change news