ரயில் மோதி கோமாவிற்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் - 8 ஆண்டுக்கு பின்னர் உயிரிழப்பு
ரயில் மோதி கோமாவிற்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர், அக்ஷு பெர்னாண்டோ 8 ஆண்டுக்கு பின்னர் உயிரிழந்துள்ளர்.
அக்ஷு பெர்னாண்டோ
இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ(Akshu Fernando).

வலது கை துடுப்பாட்டக்காரரான பெர்னாண்டோ, 2008 ஆம் ஆண்டில் பாணந்துறை அணிக்காக 23 வயதுக்குட்பட்டோர் போட்டியில் விளையாடியதால் மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
பாணந்துறை மற்றும் ராகமா கிரிக்கெட் அணிகளுக்காக 39 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் விளாசியுள்ளார்.
மேலும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், பாணந்துறை விளையாட்டுக் கழகம் மற்றும் சிலாவ் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
8 ஆண்டு கோமாவிற்கு பின் உயிரிழப்பு
கடந்த 2018 டிசம்பர் 28 அன்று, மவுண்ட் லவ்னியாவில் கடற்கரையில் பயிற்சி அமர்வின் போது, ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு விபத்தை சந்தித்தார்.

தலையில் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவுகளுடன் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கோமாவிற்கு சென்றதாக கூறப்பட்டது.
அப்போது முதல், உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது காலமாகியுள்ளார்.
விபத்திற்கு முன்னர், இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
அவரின் மறைவிற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |