பேச்சில் அசத்தும் போரிஸ் ஜான்சன்…3 மாதங்களில் 1 மில்லியன் பவுண்டு: சம்பாதித்தது எப்படி?
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சொற்பொழிவுகள் ஆற்றி மூன்றே மாதங்களில் 1 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக சம்பாதித்து அசத்தியுள்ளார்.
பதவி விலகிய போரிஸ் ஜான்சன்
பிரித்தானியாவின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு, அவை நிறுபிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஜூலை மாதம் அவர் பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
ஆனால் இன்னும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யாக பணியாற்றுகிறார்.
Boris Johnson- போரிஸ் ஜான்சன்
இதையடுத்து பிரதமர் லிஸ் டிரஸ்-ஸும் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து மிகக் குறுகிய நாட்களில் அவரது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் போரிஸ் ஜான்சன் களமிறங்கினார், ஆனால் டோரி எம்பிக்கள் அவரது முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்கை ஆதரித்தனர்.
மூன்று மாதங்களில் 1 மில்லியன் பவுண்டு
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த செப்டம்பரில் இருந்து பல்வேறு இடங்களில் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார், இவற்றின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் போரிஸ் ஜான்சன் £1 மில்லியன ($1.2 மில்லியன்) சம்பாதித்துள்ளார் என்ற தகவல் UK பாராளுமன்ற உறுப்பினர்களின் நலன்களின் அதிகாரப்பூர்வ பதிவேட்டின்படி தெரியவந்துள்ளது.
ex prime minister Boris Johnson trousers £1.03 million for four speeches in five weeks. pic.twitter.com/KOicWqH7J8
— Ian Fraser (@Ian_Fraser) December 14, 2022
நியூயார்க்கில் உள்ள வங்கியாளர்கள், அமெரிக்காவில் உள்ள காப்பீட்டாளர்கள், போர்ச்சுகலில் CNN ஏற்பாடு செய்த உச்சி மாநாடு மற்றும் இந்தியாவில் மற்றொரு சொற்பொழிவு என போரிஸ் ஜான்சனின் சமீபத்திய சொற்பொழிவுகள் அமைந்துள்ளன.
போரிஸ் ஜான்சனின் சொற்பொழிவுக்கு ஒன்றிக்கு £215,000 முதல் £277,000 ($267,000 முதல் $344,000 வரை) வரையிலான கொடுப்பனவுகளை பெறுகிறார் என்று UK பாராளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி தெரியவந்துள்ளது.