சித்திரவதை செய்யப்பட்டதாக துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி குற்றச்சாட்டு
Ex wife of Dubai prince have asked the UN to investigate allegations that United Arab Emirates officials tortured and abused her: துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, தான் அமீரக அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அது குறித்து விசாரிக்க ஐ.நா சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துபாய் ஆளுநரான ஷேக் முகம்மது பின் ரஷீதின் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) மருமகன் முறை உறவினர் ஷேக் சயீத் (Sheikh Saeed bin Maktoum bin Rashid Al Maktoum, 50).

ஷேக் சயீதின் முன்னாள் மனைவி ஸெய்னாப் ஜவாத்லி (Zeynab Javadli, 35). இவர்களுக்கு ஷெய்க்கா சனா (Sheikha Sanaa, 10), ஷெய்க்கா ஆசியா (Sheikha Asia, 8) மற்றும் ஷெய்க்கா சலாமா (Sheikha Salama, 7) என்னும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி குற்றச்சாட்டு
ஜவாத்லியும் ஷேக் சயீதும் பிரிந்த நிலையில், பிள்ளைகள் யாரிடம் வளர்வது என்பது தொடர்பில் பிரச்சினை ஏற்பட, துபாய் நீதிமன்றம் ஒன்று, ஜவாத்லி, பிள்ளைகளை ஷேக் சயீதிடம் ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் அமீரக அதிகாரிகள் தன் வீட்டுக்குள் நுழைந்து, தன்னைத் தாக்கி, போதை ஊசி போட்டு, தன் பிள்ளைகளை தூக்கிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார் ஜவாத்லி.
தன் பிள்ளைகள் கதறுவதை மட்டும் தான் கடைசியாக கேட்டதாக தெரிவித்துள்ளார் ஜவாத்லி.
இந்நிலையில், ஜவாத்லி தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஐ.நா சபை தலையிட்டு விசாரணை நடத்தவேண்டும் என அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அத்துடன், பிள்ளைகள் மூன்று பேரும் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்துமாறும் ஜவாத்லி தரப்பில் ஐ.நா சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.