இந்திய வம்சாவளியினருக்கு சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை: சர்வதேச சமூகம் எதிர்ப்பு
சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி, இந்திய வம்சாவளியினர் ஒருவருக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எதனால் தூக்குத்தண்டனை?
சிங்கப்பூர், போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்கு மரணதண்டனை விதித்துவருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்திய வம்சாவளியினரான நாகேந்திரன் தர்மலிங்கம் (Nagaenthran K Dharmalingam) உட்பட 11 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியினரான தங்கராஜு (Tangaraju Suppiah, 46) என்பவரது மொபைல் போன், ஒரு கிலோ கஞ்சாவைக் கடத்தும் முயற்சியை ஒருங்கிணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
The New Indian Express
கடைசி நிமிடம் வரை உதவி கோரி கெஞ்சிய குடும்பத்தினர்
தங்கராஜுவின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் அவசர கோரிக்கை விடுத்தது.
பிரித்தானிய தொழிலதிபர் Richard Branson, தங்கராஜுவின் மரண தண்டனையை நிறுத்துமாறு வலியுறுத்தியிருந்தார்.
நேற்று இரவில் கூட, தங்கராஜுவின் குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தங்கராஜுவின் தண்டனையை நிறுத்தக்கோரி சிங்கப்பூர் ஜனாதிபதி Halimah Yacobக்கு அழைப்பு விடுக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
With less than 10 hours to go before his scheduled hanging, his niece and nephew are appealing to the public to continue calling on President Halimah Yacob and the Singapore government to show mercy and stop his execution.#StopTheKilling #SpareTangaraju pic.twitter.com/fKWEaDwbtd
— Transformative Justice Collective (@tjc_singapore) April 25, 2023
அந்த வீடியோவில், அவரை 6.00 மணிக்குக் கொன்றுவிடுவார்கள். ஆனாலும், 5.55 மணி வரையிலும் நம்பிக்கை இழக்காமல் இருப்போம் என்று கூறிய தங்கராஜுவின் சகோதரி மகள், எங்கள் மாமா ஒரு நல்ல மனிதர், அவருக்கு கல்வியறிவோ, பணமோ இல்லாதிருந்த நிலையிலும் எங்களை கவனித்துக்கொள்வதற்காக அவர் கடினமாக உழைத்தார் என்று கூறியிருந்தாள்.
தூக்குத்தண்டனை நிறைவேற்றம்
ஆனால், சர்வதேச எதிர்ப்பையும் மீறி, சிங்கப்பூர் அரசு இன்று காலை தங்கராஜுவுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றிவிட்டது. இந்த தகவலை சிங்கப்பூர் சிறைத்துறை சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது.
எதிர்பையும் மீறி தங்கராஜுவை சிங்கப்பூர் அரசு தூக்கில் போட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு உருவாகியுள்ளது.
Photograph: How Hwee Young/EPA
தங்கராஜு கைது செய்யப்படும்போது அவர் இருந்த பகுதியில் எங்குமே போதைப்பொருட்கள் இல்லை என்று கூறியுள்ளார் Richard Branson.
Amnesty International உட்பட பல மனித உரிமை அமைப்புகள், தங்கராஜூவின் வழக்கில் பல பிழைகள் உள்ளன, அவருக்கு வழக்கறிஞரோ, மொழிபெயர்ப்பாளரோ இல்லாமல் இந்த வழக்கு நடத்தப்பட்டுள்ளது என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.