நீளும் ஈரான் போர் - தங்கம் விலை குறையுமா? நிதி நிபுணர் விளக்கம்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்த தொடங்கியது.
இந்த போர் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.
ஈரான் போரால் தங்க விலையில் தாக்கம்
அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு முன்வந்தாலும், ஈரான் தனது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் போரை நிறுத்த முடியாது என உறுதியாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வரும் ஈரான் முக்கிய எரிபொருள் விநியோக பாதையான ஹார்மோஸ் நீரிணையை மூடியுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலையில் என்ன மாற்றம் ஏற்படும், தங்கத்தின் விலை மேலும் குறையுமா, பங்குசந்தையில் என்ன தாக்கம் இருக்கும் என நிதி நிபுணர் PR சுந்தர் விளக்கமாக பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |