ஏர் இந்தியா விமான விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா? நிபுணரின் கருத்து
அஹமதாபாத் விமான விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்னும் அதிரவைக்கும் கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார் துறைசார் நிபுணர் ஒருவர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் கருத்து
முன்னாள் விமானியான டெர்ரி டோஸர் என்பவர், எஞ்சின்களுக்குச் செல்லும் எரிபொருளை நிறுத்தும் லீவர் தானாக இயங்கியிருக்க வாய்ப்பில்லை. யாரோ வேண்டுமென்றேதான் அதைச் செய்திருக்கவேண்டும் என்று கூறியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அதாவது, விமானிகளில் ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது என்னும் ஒரு கருத்து உருவாகியுள்ளது.
விமான விபத்து தொடர்பான அறிக்கையில், ஒரு விமானி மற்றவரிடம் எஞ்சினுக்கு எரிபொருள் செல்லும் பொத்தானை ஏன் ஆஃப் செய்தாய் என கேட்க, நான் அதைச் செய்யவில்லை என மற்றவர் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அறிக்கை யார் அந்தக் கேள்வியைக் கேட்டது, யார் பதிலளித்தது என, எந்த விமானியுடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
ஒரு விமானியை குற்றம் சாட்டுவதை தவிர்ப்பதற்காக அவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருக்கலாம் என்கிறார் டெர்ரி.
அப்படியானால், விமானிகளில் ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதா என டெர்ரியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர், அது யூகத்தின் அடிப்படையிலானதுதான், உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது என்கிறார்.
சர்வதேவ விமானிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை
இந்நிலையில், விமான விபத்து குறித்த அறிக்கை முதல் கட்ட அறிக்கைதான், அது விபத்து எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தைக் கூறவில்லை என்று கூறியுள்ளது, சர்வதேச விமானிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (The International Federation of Air Line Pilots’ Associations, IFALPA).
IFALPA urges against speculation on Air India 171 crash. The preliminary report shares early facts but offers no conclusions. Let the full investigation proceed—victims and families deserve professionalism, not guesswork. https://t.co/dleCKefKXp #AI171 #AviationSafety pic.twitter.com/JDGu4LbzvA
— IFALPA (@IFALPA) July 14, 2025
ஆகவே, முதல் கட்ட அறிக்கையின் அடிப்படையில், யாரும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம், அது குறித்து ஊடகங்களிலோ சமூக ஊடகங்களிலோ வெளியிடவேண்டாம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |