அணுகுண்டு வெடித்தால் உடனடியாக என்ன செய்யவேண்டும்? நிபுணர்கள் ஆலோசனை
உலக நாடுகள் சில ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், மூன்றாம் உலகப்போர் வரக்கூடும் என பலரும் உறுதியாக நம்புகிறார்கள்.
அப்படி மூன்றாம் உலகப்போர் வெடிக்குமானால், அணுகுண்டுகள் வீசப்படவும் வாய்ப்புள்ளது என்றும் கருதப்படுகிறது.

Credit : Aljazeera
இந்நிலையில், அப்படி அணுகுண்டு வீசப்பட்டால், உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நிபுணர் ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.
அணுகுண்டு வெடித்தால் என்ன செய்யவேண்டும்?
டிக்டாக் சமூக ஊடகத்தில் டெரிக் என அறியப்படும் அந்த நபர், 300 முதல் 800 கிலோடன் எடையுள்ள ஒரு அணுகுண்டு வீசப்பட்டால் உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து ஐந்து விடயங்களைக் கூறியுள்ளார்.
1. அணுகுண்டு வீசுவதையெல்லாம் யாரும் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு பிறகு வீசமாட்டார்கள் என்று கூறும் டெரிக், ஆகவே, அதற்காக தயாராக காத்திருக்க எல்லாம் முடியாது என்கிறார்.

ஆக, அணுகுண்டு வெடித்ததும், முகம் குப்புற தரையில் படுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் அவர். தரையில் முகம் குப்புற விழுந்து, குண்டு வெடித்த இடத்துக்கு நேராக கால்கள் இருக்கும் வகையில், தலையையும் கைகளால் மூடிக்கொண்டு படுத்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன், குண்டு வெடிப்பால் நுரையீரல் வெடித்துவிடாமல் இருப்பதற்காக, வாயைத் திறந்துவைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ள டெரிக், தப்பித்தவறி கூட குண்டு வெடிப்பதை கண்ணால் பார்த்துவிடக்கூடாது என எச்சரிக்கிறார்.
2. அணுகுண்டு வெடிப்பதற்கு பல மைல் தூரத்தில் இருந்தாலும் தப்ப முடியாது என்று கூறும் டெரிக், குறிப்பாக, குண்டு வெடித்த இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில் இருப்பவர்கள் தப்புவது கடினம் என்கிறார்.
அணுகுண்டு வெடித்ததும், அது கதிரியக்கத் துகள்களாக தரையில் வந்து விழ 10 முதல் 30 நிமிடங்கள் ஆகும் என்று கூறும் டெரிக், ஆக, மிக அதிக தொலைவில் இருந்தாலும், கட்டிடங்களுக்குள், தரைதளத்துக்கும் கீழே சென்று மறைந்துகொள்ளவேண்டும் என்கிறார்.
அத்துடன், மூன்று மைல் தொலைவு வரை இருக்கும் கட்டிடங்கள் சிதைந்து விழுவதால், கண்ணாடித் துண்டுகள் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கிறார்.
3. கட்டிடங்களுக்கு உள்ளே சென்று பதுங்குவது அவசியம் என்று கூறும் டெரிக், தரைத்தளத்துக்கும் கீழ், சுரங்கப்பாதை, செங்கல் அல்லது காங்கிரீட் கட்டிடங்களின் மையப்பகுதி ஆகியவற்றில் சென்று பதுங்குவது உதவக்கூடும் என்கிறார்.
Credit : kremldepall - stock.adobe.com
4. குண்டு வெடித்த 24 மணி நேரம் ஆபாயகரமானது என்று கூறும் டெரிக், கதவு ஜன்னல்கள் அருகே இருக்கவேண்டாம் என்றும், 72 மணி நேரத்துக்கு நேரத்துக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது என்றும், ரேடியோ ஏதாவது இருந்தால், அரசு வெளியே போவது பாதுகாப்பானது என கூறும் வரை வீடுகளுக்குள்ளேயே இருப்பது நல்லது என்றும் கூறுகிறார்.
5. அதிர்வுகளைத் தாக்குப்பிடிக்க, முடிந்தவரை கட்டிடங்களுக்குள் இருக்குமாறும், மாஸ்க் அல்லது துணியால் வாயை மூடிக்கொண்டு, பாதுகாப்பான கண்ணாடி, கையுறைகள் அணிந்துகொண்டு, கதிரியக்கம் பட்டிருக்கலாம் என கருதப்படும் பொருட்களை பார்சல் செய்துவைத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் டெரிக்.
மேலும், அரசு அல்லது ஏதாவது அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டுமானால், உடைகள் அனைத்தையும் மாற்றி, அவற்றை வெளியே வீசிவிட்டு, குளித்துவிட்டு செல்லவேண்டும். குளிக்கும்போது, கண்டிஷனர் பயன்படுத்தக்கூடாது.
ஏனென்றால், கண்டிஷனர் கதிரியக்கத் துகள்களை முடியுடன் இணைத்துவிடும். அத்துடன், பிரச்சினை ஏற்படலாம் என தெரியவந்தால், போதுமான உணவு, தண்ணீர் முதலான அத்தியாவசிய பொருட்களை சேமித்துவைத்துக்கொள்வது அவசியம் என்கிறார் டெரிக்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |