உலகின் அழிவுக்கு இவைதான் காரணமாக இருக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்
உலகின் முடிவிற்கு சில விடயங்கள் காரணமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளவை குறித்து காண்போம்.
மனிதர்களை பல நூற்றாண்டுகளாக பயமுறுத்தி வரும் விடயம் உலகின் அழிவு என்பதுதான்.
நிபுணர்களின் கணிப்புபடி விண்கற்கள், எரிமலை வெடிப்பு என பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
அணு ஆயுதப்போர்
இன்றைய சூழலில் அணு ஆயுதப்போர் உலகின் அழிவிற்கு காரணமாக இருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதங்களின் வெடிப்புகள் உடனடி அழிவு மற்றும் பாரிய உயிர் இழப்பை ஏற்படுத்தும். நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பையும் உண்டாக்கும்.
மேலும் "Nuclear Winter" என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அதாவது, எரியும் நகரங்கள் மற்றும் காடுகளின் புகை சூரிய ஒளியைத் தடுக்கும்.
அதன் மூலம் உலக வெப்பநிலையைக் குறைக்கும். இது விவசாயத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் உலகம் முழுவதும் உணவுப்பற்றாக்குறை ஏற்படும்.
இதன் காரணமாக பஞ்சம் ஏற்படும். அத்துடன் கதிர்வீச்சினால் உடல்நலப் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பேரழிவை ஏற்படுத்தலாம்.
எரிமலை வெடிப்பு
ஒரு கோட்பாடு எரிமலை வெடிப்பும் உலகின் அழிவிற்கு காரணமாக இருக்கலாம் என கூறுகிறது.
எரிமலைகள் பாரிய அளவில் மாக்மா, சாம்பல் மற்றும் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன.
சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள டோபா கால்டெராவில் வெடிப்பு ஏற்பட்டது.
இது கடைசியாக அறியப்பட்ட சூப்பர் எரிமலை வெடிப்பு என்று கூறப்படுகிறது. உலகளவில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
விண்கற்கள் மோதல்
சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சிறுகோள் மோதியதால் டைனோசர்கள் அழிந்துவிட்டன என்று நம்பப்படுகிறது.
இதனால் இந்த கோட்பாடும் உலக அழிவுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு விண்கல் மோதினால் பெரிய அளவில் ஆற்றல் வெளிப்படும். இதனால் உலகளாவிய அழிவு, தீ மற்றும் சுனாமிகளை ஏற்படுத்தும்.
அத்துடன் கடும் குளிர்கால விளைவு உருவாகும். இதனால் ஏற்படும் காலநிலை மாறுதலால், பூமியில் உள்ள பெரும்பாலான உயிர்கள் அழியக்கூடும்.
வானிலை மாற்றங்கள்
காடுகளை அழித்தல் மற்றும் அதிக ரசாயன பயன்பாடு உள்ளிட்ட மனித நடவடிக்கையால் ஏற்படும் காலநிலை மாற்றம், பூமியில் உயிரினங்களுக்கு பாரிய ஆபத்து ஏற்படலாம்.
உக்ரைன் ஜனாதிபதியின் மரண தண்டனை ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது: பிரித்தானிய நிபுணர் கூறும் நிதர்சனக் கருத்துகள்
உலகின் வெப்பநிலை அதிகரிப்பால் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரும். மேலும் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால் பூமியின் சில பகுதிகள் உயிரினங்கள் வாழ முடியாததாக மாறும்.
அத்துடன் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். சூறாவளி, வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்ற கடுமையான காலநிலை நிகழ்வுகளால் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.
செயற்கை நுண்ணறிவு
மனித வாழ்க்கையின் பல அம்சங்களை செயற்கை நுண்ணறிவு எளிதாக்கும் என்ற கூற்றுடன் அறிமுகமான தொழில்நுட்பம், பின்னர் மனிதர்களை ஆபத்தில் தள்ளும் என்ற எச்சரிக்கை தகவல்களும் பரவின.
ஏனெனில் இயந்திரம் உருவாக்கும் ஆபத்துக்கள் மனித அறிவை விட அதிகமாக இருக்கும் என்பதால், AI அதன் கட்டுப்பாட்டை மீறலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இதன்மூலம் மனிதர்களை செயற்கை நுண்ணறிவு கட்டுப்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள். உலக கோடீஸ்வரர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூட AIயிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நிபுணர்களும் இதனை பரிந்துரைக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |