இலங்கைக்கு எச்சரிக்கை கொடுக்கும் வெனிசுலா ஜனாதிபதியின் கைது? (காணொளி)
அமெரிக்காவால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது, இலங்கைக்கு என்ன மாதிரியான எச்சரிக்கையை கொடுத்துள்ளது என்பதை காண்போம்.
உலகத்தை மிகவும் பதட்டமான நிலைக்கு தள்ளியுள்ளது அமெரிக்கா-வெனிசுலா விவகாரம்.
மசகு எண்ணெய்க்கான வியாபார போட்டியில் வெனிசுலாவை இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளது அமெரிக்கா.
அதன் உட்சபச்சமாக வெனிசுலா அரசின் பணத்தைக் கொடுக்காமலேயே நாம் அந்த எண்ணெய்யை பறிப்போம் என, டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியிலேயே தெரிவித்திருந்தார்.
தற்போது வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicholas Maduro) கைது செய்யப்பட்டுள்ளது என்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்ற கருத்து நிலவுகிறது.
வெனிசுலா நாட்டின் இவ்விவகாரம், உலகின் தேசிய இனங்களை வேட்டையாடும் தொடக்கமாக இருக்கலாம், இன அழிப்புகள் நியாயப்படுத்தப்படுகிறது, அரச பயங்கரவாதம் பாதுகாக்கப்படுகிறது போன்ற கருத்துக்களை அரசியல் ஆய்வாளர்கள் கோடிட்டு காட்டுவதால், இலங்கைக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கூற்றும் சொல்லப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க