ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்.., ஏன் என்று விளக்கம்
மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்
இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் அங்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
எம்.ஜி.ஆரிடம் மாத சம்பளம் பெற்று அவருக்கே முதலாளியாகும் அளவுக்கு உயர்ந்தவர்! யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?
அங்கு, இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.
பாஜக வேட்பாளரின் சர்ச்சையான செயல்
மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு சிட்டிங் எம்.பியாக இருக்கும் ககென் முர்மு பா.ஜ.க சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அந்த பகுதியில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும், வீடியோக்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பரப்பி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் ககென் முர்மு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, "அந்த பெண் என்னுடைய உறவினர் என்றும், அவர் எனக்கு குழந்தை மாதிரி எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தையை முத்தமிடுவது தவறில்லை, பெண்களை நான் தாயாக நினைக்கிறேன். அனைத்து பெண்களையும் பாஜக மதிக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |