பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: உடல் சிதறி 4 பேர் பரிதாப மரணம்
தமிழக மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெடி விபத்து
மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. அங்கு, தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள், வெடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்த ஆலையில், 11 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 3 மணி அளவில் பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில், அங்கு வேலை பார்த்த பணியாளர்கள் உள்ள சிக்கிக் கொண்டனர். மேலும், பட்டாசு ஆலை கட்டடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.
4 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில், கல்லூரி மாணவர் உள்பட 4 இளைஞர்களின் உடல் சிதறி பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை 18 இடங்களில் கிடந்தது. உடனே, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நாகை மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ்சிங் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார். இதில், பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பட்டாசு ஆலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |