இலங்கை கடலில் வெடித்து பயங்கரமாக தீப்பற்றி எரியும் சரக்கு கப்பல்! வெளியான பரபரப்பு காட்சி
இலங்கை கடலில் தீ விபத்துக்குள்ளான சரக்கு கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு மீண்டும் பயங்கரமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 20 ஆம் தேதி கொழும்பு துறைமுகத்தின் வடமேற்கே 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட MV X-PRESS PEARL சரக்கு கப்பலிலே மே 21ம் திகதி தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 25) காலை தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டு மீண்டும் தீப்பற்றியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்த 25 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் Indika de Silva தெரிவித்தார்.
மீட்கும் போது காயமடைந்த இரண்டு மாலுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
MV X-PRESS PEARL கப்பலில் இருந்து 8 கண்டெயினர்கள் கடலில் விழுந்ததாகவும், மழை மற்றும் பயங்கர கடல் அலைகளால் தீ அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
MV X-PRESS PEARL கப்பல் 2021 மே 15 அன்று இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
? More footage from the burning #MVXPressPearl
— Roel Raymond (@kataclysmichaos) May 25, 2021
Credit - State Minister @kanchana_wij #SriLanka #LKA #lka pic.twitter.com/UPBuB9EFyN
சிங்கப்பூரின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட MV X-PRESS PEARL கப்பல், 25 டன் நைட்ரிக் அமிலத்துடன், பல வேதிப்பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என 1486 கண்டெய்னர்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.