சீன கான்வாயை குறிவைத்த பெண் தற்கொலை குண்டுதாரி: கராச்சியில் வெடித்த திடீர் குண்டு வெடிப்பு!
பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் நடந்த திடீர் குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 10 வரை படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
தலைநகர் கராச்சியின் காரதர் பகுதியில் உள்ள பாம்பே பஜாரில் திங்கள் கிழமை மாலை திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடைப்பெற்ற இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் பாதிக்கபட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன் தாக்குதல் குறித்த விசாரணையையும் நடத்தி வருகின்றனர்.
CCTV footage of #KarachiBlast in Saddar area. The explosion took place as soon as a Pakistan Coast Guard vehicle was spotted. Ball bearings and other explosive elements found in bodies of the dead and injured victims. pic.twitter.com/rr8tGv9GxV
— Wajahat Kazmi (@KazmiWajahat) May 12, 2022
இதில் குறைந்தது 6 பேர் வரை படுகாயம் அடைந்து இருக்கலாம் என கராச்சி அரசு நிர்வாக அதிகாரி முர்தாசா வஹாப் தெரிவித்து இருந்த நிலையில், 10 பேர் வரை இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும், மேலும் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரழந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலானது, கடந்த 12 திகதி சதார் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நடைப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சீனப் பிரஜைகளின் கான்வாய் அருகே பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல்: பஞ்சாப் அணியை திணறடித்து வெற்றியை ருசித்த டெல்லி அணி
மேலும் இந்த பெண் தற்கொலை குண்டுதாரி பலூச் விடுதலைப் படையை சேர்ந்தவர் எனவும் சீன வாகன தொடரணியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தாகவும் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர்.