உணவு ஆர்டரில் கூடுதல் கட்டணமாக ரூ.3 வசூலிக்கப்படுகிறதா? ஸ்விக்கி அளித்த விளக்கம்
ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டரின் போது கூடுதல் கட்டணமாக ரூ.3 வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறியதையடுத்து, ஸ்விக்கி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உணவு ஆர்டர்
சமீபகாலமாக நாம் எந்த பொருளாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்தபடியே ஒன்லைனில் இருந்து ஆர்டர் செய்கிறோம்.
அந்தவகையில், உணவு ஆர்டர் செய்யும் செயலிகளில் ஒன்றான ஸ்விக்கியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டில் இருந்து கொண்டே பெறுகின்றனர்.
இந்நிலையில், ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் போது ஒரு ஆர்டருக்கு 3 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக சில வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஸ்விக்கி விளக்கம்
அந்தவகையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் சில வாடிக்கையாளர்கள் பில்லை பதிவிட்டு அதற்கான குறையை கூறி வருகின்றனர்.
அதன்படி, கிங்ஸ்லி என்ற பயனர் உணவு தொகையுடன் ஆர்டர் பேக்கிங் கட்டணம், டெலிவரி கட்டணம் மற்றும் வரிகள் என பில் தொகையுடன் கூடுதல் கட்டணமாக ரூ.3 வசூலிப்பதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு ஸ்விக்கி நிறுவனம் தனது தரப்பில், இது ஒரு காட்சி பிழையாக இருக்கலாம் என்றும், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
And even in the unlikely event that @RBI actually ordered @Swiggy to steal from customers in this manner, how is tacking on an additional Rs.3.09 to a Rs.671.91 order considered "round off the billed amount to the nearest whole amount"? https://t.co/EjWr3wNsjr
— (@kingslyj) September 21, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |