தப்பிப்பது மிகவும் ஆபத்தானது! உக்ரேனியர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை
உக்ரைனின் Severodonetsk நகரிலிருந்து தப்பிப்பது மிகவும் ஆபத்தானது என அந்நகர மேயர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருவதால், இப்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் Severodonetsk மேயர் Oleksandr Stryuk வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரம் கிட்டத்தட்ட தொடர்ச்சியான ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
60% வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 90% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் பெரியளவில் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
இதனால் உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாகும்! மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை
ஷெல் தாக்குதல்களால் நகரத்திற்கு வெளியே செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது, அதனால் மக்கள் வெளியேறுவது கடினம், ஆனால் உக்ரைனின் ராணுவம் பாதையை பாதுகாப்பானதாக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.
சுமார் 12,000-13,000 பேர் நகரத்தில் உள்ளனர், இதுவரை குறைந்தது 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என Oleksandr Stryuk கூறியுள்ளார்.