தரையில் விழுந்து வெடித்த இராணுவ விமானம்: கிரீஸ் வான்வழி விமான கண்காட்சியில் விபத்து
F-4 Phantom Crash at Athens Airshow 2 Pilots Killed: கிரீஸ் நாட்டில் நடைபெற்ற வான்வழி கண்காட்சியில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
வான்வழி விமான கண்காட்சியில் விபத்து
கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதன்ஸ் அருகே “ஏதன்ஸ் பிளையிங் வீக்”(Athens Flying Week) என்ற வருடாந்திர வான்வழி கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வான்வழி விமான கண்காட்சியில் எதிர்பாராத விதமாக எஃப்-4 ஃபான்டம் (F-4 Phantom) என்ற ராணுவ விமானம் கோர விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் செய்தி நிறுவனமான ANA தகவல் படி, இந்த இராணுவ விமான விபத்தானது பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
விபத்து தொடர்பான முக்கிய விவரங்கள்
சாகசத்திற்காக புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே தன்னுடைய உயரத்தை இழந்து கீழே விழுந்தது.
விமானிகள் இருவரும் விபத்திற்கு முன்னதாக துரதிர்ஷ்டவசமாக பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து வெளியேற வில்லை என்பதை உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
🚨 BREAKING — FULL VIDEO: Hellenic Air Force F-4E Phantom II crashes during a solo flying display at Tanagra, Greece. Footage captures the aircraft’s final maneuver before it goes down. There was no immediately visible sign of parachutes, while officials have yet to confirm the… pic.twitter.com/1NMJQAGvJS
— OSINT AFG (@AfghanOSINT0) September 5, 2026
விமானம் தரையில் விழுந்ததும் ஒரு பயங்கர வெடிப்பானது ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டனர்.
இந்த விமான விபத்தை தொடர்ந்து எஞ்சி இருந்த வான்வழி விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிகோஸ் டென்டியாஸ், கண்காட்சிக்கான தனது திட்டத்தை ரத்து செய்தார். அத்துடன் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |