மியான்மர் இராணுவத்துக்கு எதிராக facebook எடுத்த நடவடிக்கை!
வன்முறையைத் தூண்டும் விதமான பதிவுகளுக்கு எதிரான கொள்கையை மீறியதாக மியான்மர் இராணுவத்தின் பிரதான பக்கத்தை facebook நீக்கியுள்ளது.
மியான்மரில் பிப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டத்தில் பொலிஸார் நேற்று துப்பாக்கச்சூடு நடத்தினர். அதில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மியான்மர் இராணுவத்தின் Main page காணப்படவில்லை.
மியான்மர் இராணுவம் Tatmadaw என அழைக்கப்படுகிறது. மேலும் பேஸ்புக்கில் Tatmadaw True News page எனும் அதிகாரப்பூர்வ பக்கத்தைகே கொண்டுள்ளது.
வன்முறையைத் தூண்டுவதைத் தடுக்கும் கொள்கைக்கு எதிராக செயற்பட்டதாக மியான்மர் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தின் மீது Facebook இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
Facebook அதன் அறிக்கையில் "எங்கள் உலகளாவிய கொள்கைகளுக்கு ஏற்ப, வன்முறையைத் தூண்டுவதையும், தீங்குகளை ஒருங்கிணைப்பதையும் தடைசெய்த எங்கள் சமூகத் தரங்களை மீண்டும் மீண்டும் மீறியதற்காக Tatmadaw True News பக்கத்தை பேஸ்புக்கிலிருந்து அகற்றியுள்ளோம்" என்று கூறியுள்ளது.