50 சிசேரியன் பிரசவங்களுக்கு உதவிய போலி மருத்துவர்.., அறுவை சிகிச்சை செய்யும் போதே கைது
சுமார் 50 சிசேரியன் பிரசவங்களை மேற்கொண்ட போலி மருத்துவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி மருத்துவர் கைது
இந்திய மாநிலமான அசாம், ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் சுமார் 50 சிசேரியன் பிரசவங்களுக்கு உதவியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இவர் போலி மருத்துவர் என்ற உண்மையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, இவர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கும் போதே ஆபரேஷன் தியேட்டரில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், "போலி மருத்துவர் புலோக் மலாக்கர் ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சான்றிதழ்களும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.
தற்போது இந்த போலி மருத்துவர் 5 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது மாதிரியான நபர்கள் கிராம புறங்களில் உள்ள நடுத்தர குடும்பங்களை குறி வைக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் போலி மருத்துவர்களை பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |