விசாரிக்க சென்ற எஸ்ஐ வெட்டி கொலை.., தமிழகத்தில் நடந்த அடுத்த கொடூரம்
நேற்று இரவு விசாரணை நடத்த சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்ஐ வெட்டி கொலை
தமிழக மாவட்டமான திருப்பூர், உடுமலை பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு இந்த தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ள மூர்த்தி மற்றும் அவரது தங்க பாண்டியனுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், தந்தை மூர்த்தியை மகன் தங்க பாண்டியன் கடுமையாக தாக்கியதால் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சண்முகவேல் காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

திமுக, அதிமுகவை பேய் பிசாசு என்று விமர்சித்த சீமான்.., சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள் என கோரிக்கை
இதனால் ஆத்திரமடைந்த தங்க பாண்டியன் அரிவாளால் சண்முகவேலை தாக்கியுள்ளார். மேலும், அவருடன் வந்த ஓட்டுநரையும் தாக்குவதற்கு துரத்தியுள்ளார்.
இதில், ஓட்டுநர் தப்பித்துச் சென்று காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சண்முக வேல் உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், தங்க பாண்டியனை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |