திமுக, அதிமுகவை பேய் பிசாசு என்று விமர்சித்த சீமான்.., சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள் என கோரிக்கை
திமுக மற்றும் அதிமுக கட்சிகளை பேய், பிசாசுடன் ஒப்பிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சீமான் பேசியது
மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக பதவியேற்றுள்ள அந்தோணிசாமி சவரிமுத்துக்கு வாழ்த்து தெரிவித்த பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தை மீட்போம் என்றும் ஓரணியில் கூடுவோம் என்றும் சொல்கிறார்கள். யாரிடம் நமது மாநிலத்தை அடகு வைத்துள்ளார்கள். இத்தனை நாட்கள் தமிழகத்தை மீட்காமல் என்ன செய்து கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் பாஜக ஆதரவாளர்கள் என்பதால் அவர்களுக்கு இங்கு வாக்களிக்க உரிமை வழங்க கூடாது.
திமுக வரக்கூடாது என்று அதிமுகவுக்கும், அதிமுக வரக்கூடாது என்று திமுகவுக்கும் மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.
அதாவது பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். எனது குரல் ஒலிக்க வேண்டுமென்றால் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |