ரூ.7,000 வாடகை கட்டடத்தில் போலியான SBI Bank உருவாக்கி லட்சக்கணக்கில் மோசடி
போலியான எஸ்பிஐ வங்கி கிளை உருவாக்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.
போலியான எஸ்பிஐ வங்கி
இந்திய மாநிலமான சத்தீஷ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் சஹப்போரா. இந்த நகரத்தில் புதிதாக போலியான எஸ்பிஐ வங்கி கிளை ஒன்று உருவாகியுள்ளது.
இந்த வங்கியை பார்க்கும் போது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக எஸ்பிஐ வங்கி போலவே கவுண்டர்கள் அமைத்து செட் அமைத்துள்ளார்கள். இந்த போலி வங்கியானது 10 நாட்கள் இயங்கியுள்ளது.
இங்கு, அஜய் குமார் அகர்வால் என்ற உள்ளூர் நிர்வாகி ஒருவர் எஸ்பிஐ வங்கியின் சேவை மையம் தொடங்குவதற்கு விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால், அவருக்கு ஒரே இரவில் வங்கி கிளை உருவானதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தப்ரா நகரின் எஸ்பிஐ மேலாளரிடம் இதுபற்றி தகவல் கொடுத்துள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
இதன்பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளது. ரூ.7 ஆயிரத்திற்கு கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து போலியான வங்கி ஒன்றை மோசடி கும்பல் ஆரம்பித்துள்ளனர்.
அதோடு, ரூ.30000 சம்பளம் என்று இளைஞர்களிடம் கூறி அவர்களிடம் பல லட்சம் பணம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையும் கொடுத்துள்ளனர்.
தற்போது, இந்த மோசடியை நிகழ்த்திய 4 பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |