வன்புணர்வு செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்ட பெண்! அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவத்தில் வெளியான உண்மை
டெல்லியில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாக பெண் கூறிய புகார் முற்றிலும் போலியானது என தெரிய வந்துள்ளது
நிலத்தகராறில் சிலரை சிக்க வைக்க பெண்ணொருவர் வன்புணர்வு நாடகத்தை அரங்கேற்றியது தெரிய வந்துள்ளது
இந்திய தலைநகர் டெல்லியில் பெண்ணொருவர் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் வெறும் நாடகம் என்ற அதிர்ச்சி உண்மை தெரிய வந்துள்ளது.
டெல்லியின் காசியாபாத் ஆசிரமம் சாலையில் பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.
குறித்த பெண் சாக்குமூட்டையில் கட்டி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அவரது பிறப்புறுப்பில் இரும்பு ராடு திணிக்கப்பட்டதாக 5 பேர் மீது அப்பெண் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது.
புகார் கூறிய பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என தெரிய வந்தது.
அதன் பின்னர் பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த பெண் தனது நண்பர்கள் வீட்டில் இருந்துள்ளார் என்பதை, அவரது செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்தனர்.
மேலும், நிலத் தகராறில் குறிப்பிட்ட 5 பேரை சிக்க வைக்கவே அப்பெண் இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக தெரிய வந்துள்ளது.