சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு நேர்ந்த துயரம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு நேர்ந்த துயரம்
ஞாயிற்றுக்கிழமையன்று, கர்நாடகா மாநிலத்திலுள்ள உத்தர கன்னடா என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினரான 14 பேர் ஆறு ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.

அப்போது மழை பெய்துகொண்டிருந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் ஆற்றுக்குள் இறங்கி சிப்பிகளை சேகரித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
காலை 11.30 மணியளவில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட, மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருவரைக் காணவில்லை. பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |