மனைவி உட்பட குடும்பத்தார் ஐவரை எரித்து கொன்ற நபர்! அடுத்த 24 மணி நேரத்தில் சடலமான சம்பவம்
மொத்த குடும்பத்தையும் எரித்து கொன்ற கொடூரம்.
அடுத்தநாள் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.
இந்தியாவில் மொத்த குடும்பத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர் அடுத்த நாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் குல்தீப் சிங் (32). இவரின் மனைவி பெயர் பரம்ஜீத் கவுர். கவுருக்கு முதல் கணவர் மூலம் இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவரை பிரிந்து குல்தீப் சிங்கை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பரம்ஜீத், குல்தீப்புடன் சண்டை போட்டு கொண்டு தனது குழந்தைகளை அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று அங்கு சென்ற குல்தீப் மனைவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைக்க மறுத்துவிட்டார்.
HT Photo/ Representational image
இதையடுத்து தனது இரண்டு நண்பர்கள் உதவியுடன் மனைவி பரம்ஜீத், இரண்டு பிள்ளைகள் மற்றும் பரம்ஜீத்தின் பெற்றோர் என ஐந்து பேர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றார்.
இந்த நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் குல்தீப் சடலமாக தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்ததாக கூறும் பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையில் ஐந்து பேரை கொன்ற சம்பவத்தில் உதவிய குல்தீப்பின் நண்பர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.