185 பேர் ஒன்றாக வசிக்கும் பெரிய குடும்பம்.., அவர்களின் வருமானம் எத்தனை கோடி தெரியுமா?
ஒரே குடும்பத்தில் 6 தலைமுறையாக 185 ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் எந்த பிரச்னை வந்தாலும் தங்களுக்குக்குள் தீர்த்துக் கொள்கின்றனர்.
தற்போது உள்ள காலத்தில் கூட்டுக் குடும்பத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது. திருமணம் ஆனவுடனையே கணவரும், மனைவியும் தனியாக சென்று வாழ்கின்றனர். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் 185 பேர் ஒன்றாக 6 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
185 பேர் ஒன்றாக வசிக்கும் குடும்பம்
இந்திய மாநிலமான ராஜஸ்தான், அஜ்மீரில் இருக்கும் ராம்சார் கிராமத்தில் உள்ள பெரிய குடும்பத்தில் ஆறு தலைமுறைகளாக 185 பேர் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பேர்டிசந்த் என்பரின் தந்தை, அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அதையே பின்பற்றுகின்றனர். இவர்களுக்குள் எந்த பிரச்சனை வந்தாலும் தங்களுக்குக்குள் தீர்த்துக் கொள்கின்றனர்.
மேலும், குடும்பத்தின் வருமானத்திற்காக தங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்து தானியங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிடுகின்றனர்.
சமையல் மற்றும் வருமானம்
இந்த குடும்பத்தில் உள்ள 185 பேருக்கும் ஒரு நாளில் மூன்று வேளையும் சமைப்பது என்றால் பெரிய சவாலான விடயம் தான். இதற்காக, குடும்பத்தில் உள்ள பெண்கள் காலையிலேயே தயாராகி, 4 மணிக்கு அடுப்பை எரிய விடுகின்றனர்.
ஒரு அடுப்புக்குப் பதிலாக, 13 அடுப்புகளில் சமைக்கின்றனர். சமையலுக்காக தினமும் 40 கிலோ காய்கறிகளும், 50 கிலோ கோதுமை மாவும் தேவைப்படுகிறது.
இவர்களின் வீட்டின் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், சுமார் 80 பைக்குகள் வீட்டின் வெளியே நிறுத்தப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |